மதுரைக்கு மேற்கே உசிலம்பட்டி வட்டத்தில் அமைந்துள்ளது விக்கிரமங்கலம்
என்னும் சிற்றூர். இங்குள்ள மலைகளில் சமணர்கள் வாழ்ந்த குகைத் தளங்களும், தமிழி (பிராமி)
கல்வெட்டுகளும் உள்ளன. அதனைக் காண்பதற்காக சென்ற ஞாயிறு அதிகாலை
வேளையில் நண்பர்களோடு விக்கிரமங்கலம் சென்று வந்தேன். மதுரை தேனி நெடுஞ்சாலையில்
செக்காணூரணி ஊரைக் கடந்து சாலையின் வலது புறத்தில் உள்ள பிரிவு வழியாக விக்கிரமங்கலம்
சென்றோம். இங்கு தான் உண்டாங்கல்லு என்னும் மலையும், பஞ்சபாண்டவர் படுகையும் உள்ளது.
28 பிப்., 2012
25 பிப்., 2012
தென்தமிழகத்தின் எல்லோரா “ கழுகுமலை ”
மலைப்பயணம் செய்தவர்களுக்கு தெரிந்திருக்கும் அந்த இனிமையும், குளுமையும். இன்றும் தங்களது இயந்திர வாழ்க்கையைவிட்டு மலைப்பகுதிகளுக்கு விடுமுறை நாட்களில் சென்று மனதையும் உடலையும் இலகுவாக்கி உற்சாகமடைபவர்கள் பலர். அங்கு அவர்கள் கண்ட ரம்மியமான காட்சிகள் என்றுமே மனதைவிட்டு நீங்காத காலச்சுவடுகளாக பதிவாகிவிடும்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)