9 பிப்., 2014

அன்பின் வழியது உயிர்நிலை...


410 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் மழை பெய்தது. அதுவே பூமியின் முதல் மழை. பூமியில் அப்போது எந்த உயிரினமும் இல்லை. அந்த மழைதான் பூமியில் பெருங்கடல்களை உற்பத்தி செய்தது. அந்த பெருங்கடலில்தான் பூமியின் முதல் உயிரிகள் தோன்றின.
                                                                                                                                 - . செந்தமிழன்

உயிர்களின் பரிணாம வளர்ச்சியில் பல்வேறு உயிரினங்கள் இப்பூவுலகில் பிறந்தன. ஒவ்வொரு உயிர்களும் தத்தம் வாழ்வினை மிக அழகாக வாழ்ந்து வருகின்றன. மனிதர்களின் வாழ்வை போல் எந்தவித எதிர்பார்ப்பையும் கொண்டில்லாமல் சுதந்திரமாக தங்களது வாழ்வை கொண்டுள்ளன. மனிதனுக்கு மட்டும் தான் இவ்வுலகம் என்ற கொள்கையோடு தற்போதைய மனிதச்சமூகம் வளர்ந்துவருகிறது. எவ்வளவு இடத்தை தங்களது பெயரில் பதிவு செய்து கொண்டு, அதற்குள் வேறு எவரையும் நுழையவிடாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதை நாம் அனைவரும் நன்கறிவோம்.