22 மார்., 2014

நீரைத் தேடும் வேர்களாய்... குழாய்கள் !

ட்ர்ர்ர ட்ட்ர்ர் ட்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஷ்ஷ்ஷ்..ட்ர்ர்ர்... என்னடா இது ஒன்னுமே புரியலேன்னு பார்கிறீங்களா ????
ஆம், கடந்த மூன்று நாட்களாய் இரவு முழுவதும் தூக்கத்தை கெடுத்து, தொடர்ந்து பகல் முழுவதும் விடாமல் என் காதில் விழுந்த ஆழ்குழாய் இடும் இயந்திர (போர்வெல்) ” சத்தத்தின் வெளிப்பாடு தான் இந்த எழுத்துக்கள். எங்கள் தெரு மட்டுமில்லாமல் சுற்றிலும் உள்ள எல்லா இடங்களிலும் 'நீரின் மட்டம்' உறிஞ்சும் மோட்டார் மற்றும் குழாய்களை ஏமாற்றி கொண்டே இருந்திருக்கிறது. அனைவரும் 400, 500, 600 அடி ஆழத்தில் நீரை ஒருவழியாக கண்டு பிடித்திருந்தனர் என்ற செய்தி நம் காதுகளை எட்டியது.
மூன்று நாட்களுக்கு பிறகு...

19 மார்., 2014

பறவைகள் பூமியின் உன்னத ஜீவன்கள்...


பூமியில் பறவைகள் இல்லை என்றால், ஒரே நாளில் பூமி அழிந்துவிடும். ஏனென்றால், பெரும்பாலான பறவைகள் புழு, பூச்சிகளை உணவாக கொள்கின்றன. எனவே, இந்த உலகில் மனிதர்கள் இன்றி பறவைகள் வாழமுடியும். ஆனால், பறவைகள் இன்றி மனிதர்களால் வாழ முடியாது.
-    சலீம் அலி, பறவையியல் பேரறிஞர்.
நீர் இறைப்பதற்காக, கிணற்றுக்குள் வாளியை இறக்கியதும் உள்ளிருந்து ‘விர்ர்..’ என  மேலே வரும் குருவிகள். கிண்ற்றுக்குள் கால் வைத்து இறங்குவதற்கு வசதியாக உட்புறச்சுவர்களில் சிறு துளைகள் வரிசையாக 2 அல்லது 3 அடிகளுக்கு இடைவெளிகளில் அமைந்திருக்கும். இந்த சிறு சிறு  துளைகள் தான்...