மேலூரிலிருந்து திருச்சி செல்லும் நான்கு வழிசாலையின் வலதுபுறம் கருங்காலக்குடி என்னும் சிற்றூர் அமைந்துள்ளது. கருங்காலக்குடிச் சிற்றூரின் கிழக்கு திசையில் அமைந்துள்ளது பஞ்ச பாண்டவர் மலை (அ) குன்று. இம்மலையில் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பாறை ஓவியங்களும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழிக் கல்வெட்டும் கற்படுக்கைகளும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சமண முனிவரின் சிற்பமும், வட்டெழுத்துக் கல்வெட்டும் காணப்படுகின்றன.
இயற்கையாகவே பஞ்ச பாண்டவர் மலையின் கீழ்பகுதி குகை போன்று அமைப் காணப்படுகின்றது. குகையின் கீழ்த் தளத்தில் சுமார் 30 கற்படுகைகள் வெட்டப்பட்டுள்ளன. குகையின் முகப்பில் நீர்வடி விளிம்பு வெட்டப்பட்டு அதன்கீழ் தமிழ்பிராமிக் கல்வெட்டு ஒன்று வெட்டப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கி.மு 2ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. குகைத் தளத்திற்கு அருகிலுள்ள குன்றில் சமண முனிவரின் சிற்பமும் வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் செதுக்கப்பட்டுள்ளது. இக்குகைத் தளத்தின் மேல்புறம் அமைந்துள்ள மலைப் பாறையில் ஓவியங்கள் காணப்படுகின்றன. ஓவியங்களைக் காண ....