கழிஞ்சமலைத் தொடரில் பல விதமான பாறைகளின் வித்தியாசமான உருவங்களையும், அவைகளின்
புவியியல் அமைப்பையும் கண்டபடியே நடந்து கொண்டிருந்தோம். வழியில் கண்ட சிறுகுன்றின்
மீது நிற்கும் ஒரு பாறையின் இந்த காட்சி மீண்டும் மனதைவிட்டு அகலாமல் கல்லாய் நிற்கிறது.
குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு பாறைக்கு அருகே பல மணிகள் இரண்டு கற்தூண்களுக்கு நடுவே கம்பி ஒன்றில் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்த மணிகள் அனைத்தும் மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும். அருகில் தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் ஏதும் காணப்படவில்லை. மலைப் பாறையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருவதாக அருகில் இருந்த சில குடியிருப்பு வாசிகள் கூறினர். இயற்கை சில இடங்களில் தெய்வமாக வழிபடுவதை காணும் பொழுதெல்லாம் மனம் நிறைவு அடைகிறது. கோயில் மணிகளை பார்த்துவிட்டு பின்னர் அருகில் இருந்த குகைத் தளத்திற்கு சென்றோம்.