திருமங்கலத்திற்கு அருகிலுள்ள தே.கல்லுப்பட்டி – பேரையூர்
சாலையில் உள்ளது தேவன்குறிச்சி சிற்றூர். இங்குள்ள மலைக்கு அருகில் உள்ள அக்னீஸ்வரர்
- கோமதியம்மன் கோவிலில் கி.பி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுகள்
சில உள்ளன. இதில் இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள்
சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும்
காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை
சேர்ந்தவை.
இங்குள்ள 8 கல்வெட்டுகளில் 6 கல்வெட்டுகள் கோயில் சுவர்களிலும்,
ஒன்று கோவிலுக்கு பின்புறமுள்ள கிணற்றுக்குள் கல்வெட்டு தழைகீழாகவும் மற்றொன்று கோவிலுக்கு
எதிர்புறம் விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சுவற்றிலும் காணப்படுகின்றன. அ. கோயில் நடைபாதையில் குளத்திற்கு அருகிலுள்ள கல்வெட்டில்., இக்கோவிலுக்கு சந்தியாதீபம் எரிப்பதற்காக அளிக்கப்பட்ட நிலத்தின் எல்லைகள் பற்றி கூறுகிறது.
1.
மாறபர்மரான திரிபுவன சக்கரவத்திகள் சோணாடு வழங்கியருளிய….
2.
நாயனாற்கு நான் சந்தியா தீபத்துக்கு குடுத்த நீர் பெரியகுளத்தி….
3.
னல்லை புகைபோக்கிக்கு கிளக்கும் வடஎல்லை மேல்ப….
4.
வும் சந்திராதித்தவரை யிறையிலியாக விட்டுக் குடுத்தமைக்கு
5.
திருமலை நிலனரை…
ஆ ( மலைக்குச் செல்லும் வழியில் வடக்கு நோக்கிய மதில் சுவரில் ) |
1.
ஸ்ரீகோமாறபற்மரான திரிபுவன சக்கரவத்திகள்
சோணாடு….
2.
யனாற்கு சந்தியாதீபம் ஒன்றுக்கும் சந்திராதித்தவரை செல்வ….
3.
தென்பாற் கெல்லை அப்பன் கூத்தர் செய்க்கு வடக்கும் மேல்பால்….
4.
மணர் விலை ஒற்றி சீதனம் உள்ளிட்டு பற்றி முன்னின்றவர் கைக் கொண்….
இ ( நவகிரகத்திற்கு அருகிலுள்ள கல்வெட்டு ) |
1.
ஸ்ரீ ஸுஙூ பாண்டிய தேவற்கு யாண்டு யஎவது ஸ்ரீ பாண்டி…
2.
ன் இனாயனார் திருவற்க்கீசுரமுடைய னாயனார்க்கு நான்….
ஈ ( கோவில் தென்புற மதில் சுவர் ) |
1.
த்திகள் சோணாடு கொண்டருளிய ஸ்ரீசுந்தரபாண்டிய தேவற்கு….
2.
சந்திராதித்தவரை செல்வதாக இவ்வூர் எழுவன் சிறந்தானான…
3.
லை மேற்படியான்ஞ் செய்க்*க்கு வடக்கும்
மேல்பால்க் கெல்லை பஞ்ச…
4.
றமமாக கைக் கொண்டு இக்கோயில் சிவ(பி)பிராமணர் விலை….
உ II ( கோவில் தென்புற மதில் சுவர் ) |
உ III ( கோவில் தென்புற கோவில் சுவர் கீழ் பகுதியில் ) |
I II
1. மண்டலத்து… 1. வதஸ்ரீ…
2. சந்தியாதீப… 2. க்கிவரமுடை…
3. துவாராச்ச… 3. ருங்குன்றத்து வெள்ளாளர் செய்க்கு…
4. முத்து
உ… 4. கெல்லை உள் நடுவுபட்ட நிலம் ஓ…
III
1.
உதையவள…
2.
க்கு தந்த அச்சு க…
3.
ன இப்படிக்கு இ…
ஊ. கோயில் கருவறை தென்சுவரில்., நிலக்கொடை,
அதன் எல்லைகள் கூறப்பட்டுள்ளன. செங்குன்ற நாட்டு பெருங்குன்றத்தூர் எனும் ஊரின் பெயர்
குறிப்பிடப்பட்டுள்ளது.
1.
யலியாக விட்டுக் குடுத்தமைக்கு இவை எழுவன்(ன்) சிறந்தானனன்…
2.
தையவளநாட்டு செங்குடி நாட்டு பெருங்குன்றத்….
3.
று சாண் கோலால் நிலம் ஒரு மாவுக்கும் கீழ்பாற் கெல்லை…
4.
ஆக இசைந்த இன்னான் கெல்லை உள் நடுபட்ட நிலம் ஒரு மாவு…
5.
தமைக்கு இவை ஆண்டான் அரியானான சேனாவரைய…
எ. (கிணற்றுக்குள் உள்ளே உள்ள கல்வெட்டு) |
1.
ஸ்ரீ ஸுஙூ பாண்டிய தே…
2.
ல் புகை போகிக்குத் தென்கி…
3.
டியானுக்கு தெக்கு….
4.
ன் பெருங்குன்றத்தூர் கிழவன்…
ஏ.
கோயிலுக்கு எதிர்புறம் விநாயகர் சன்னதியை ஒட்டிய குளத்திற்கு அருகிலுள்ள சுவற்றிலும்
காணப்படும் கல்வெட்டில்., இக்குளத்தின் படிக்கட்டுகளை மீனாட்சிப்புரம் சுப்பிரமணியத்
தேவர் மகன் கட்டினார் என்ற செய்தியும், கோயில் நில எல்லையையும் குறிக்கின்றது.
2.
கிருபையால்
3.
ந. மீனாஷிபுரம்
4.
அ.ராம. சுப்ரமண்
5.
யத் தேவர் மக
6.
ன் புண்ணிய
7.
தில் படி வேலை
8.
உ பயம்
9.
1931 வரு டிச
10.
ம்பர் மீ 5 உ
தேவன்குறிச்சி
சிற்றூரின் வரலாற்றை அறிந்துகொள்ள இச்சுட்டியை அழுத்திப் படிக்கவும்…. 6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக