மதுரை – மாட்டுத்தாவணி என்ற பெயர்ப் பலகையோடு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமென்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை. காற்று கிடைக்கும் என்பதால், படியை ஒட்டிய இருக்கையில் ஒற்றையாளாய் ஒட்டிக் கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது. பயணம் துவங்கிய சில வினாடிகளில் நகர எல்லையைவிட்டு புறநகர் சுற்றுச்சாலையில் பேருந்து பாய்ந்து கொண்டிருந்தது, வேங்கையை போல. வெளியே செந்நிறத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது அதிகாலை ஆகாயம். நாசி வழியாக ஈரப்பதம் நிறைந்த மெல்லிய காற்று மூச்சுக் குழலுக்குள் மென்மையாக சென்று கொண்டிருந்தது. முகமெல்லாம் சில்லென்று ஆகியது. நகர வாழ்க்கையில் வெயில்பட்டு வறண்ட முகத்தையும் தேகத்தையும் சில் காற்று முழுமையாய் அப்பிக் கொண்டிருந்தது.
24 செப்., 2013
9 ஆக., 2013
மரங்களில்தான் விளம்பரம் செய்யணுமா ?...
வெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும்.
எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து
விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா(?)
என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன.
இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும்
அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’
இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை.
ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது?27 ஜூலை, 2013
கழிஞ்சமலை தமிழி கல்வெட்டுகள்...
கழிஞ்சமலைத் தொடரில் பல விதமான பாறைகளின் வித்தியாசமான உருவங்களையும், அவைகளின்
புவியியல் அமைப்பையும் கண்டபடியே நடந்து கொண்டிருந்தோம். வழியில் கண்ட சிறுகுன்றின்
மீது நிற்கும் ஒரு பாறையின் இந்த காட்சி மீண்டும் மனதைவிட்டு அகலாமல் கல்லாய் நிற்கிறது.
குகைத்தளம் அமைந்துள்ள இடத்திற்கு செல்வதற்கு முன் ஒரு பாறைக்கு அருகே பல மணிகள் இரண்டு கற்தூண்களுக்கு நடுவே கம்பி ஒன்றில் தொங்கவிடப் பட்டிருந்தது. இந்த மணிகள் அனைத்தும் மக்களின் வேண்டுதலாக இருக்க வேண்டும். அருகில் தெய்வங்களின் உருவங்கள், சிலைகள் ஏதும் காணப்படவில்லை. மலைப் பாறையையே தெய்வமாக இப்பகுதி மக்கள் வழிப்பட்டு வருவதாக அருகில் இருந்த சில குடியிருப்பு வாசிகள் கூறினர். இயற்கை சில இடங்களில் தெய்வமாக வழிபடுவதை காணும் பொழுதெல்லாம் மனம் நிறைவு அடைகிறது. கோயில் மணிகளை பார்த்துவிட்டு பின்னர் அருகில் இருந்த குகைத் தளத்திற்கு சென்றோம்.

அரிட்டாபட்டியில் குடைவரை கோயில்...
மதுரையிலிருந்து திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள
நரசிங்கம்பட்டி என்னும் சிற்றூர்க்கு மேற்கே அரிட்டாபட்டி எனும் சிற்றூர் அமைந்துள்ளது.
மதுரையிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது அரிட்டாபட்டி சிற்றூர். இங்கு
முற்கால பாண்டியர் காலத்து குடைவரையும், 2000 வருட பழமையான தமிழிக் கல்வெட்டும் உள்ளது.
இதனை காண்பதற்காக பசுமைநடைக் குழுவோடு இணைந்து சென்ற வாரம் ஞாயிறு காலை சென்று வந்தேன்.
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகில் குழுவினர் சந்திக்கும் இடமாக கூறப்பட்டு
இருந்தது. காலை 6.30 மணியளவில் அங்கு சென்றேன். குழுவினர் ஏற்பாடு செய்திருந்த பேருந்தில்
சுமார் 60க்கும் மேற்பட்டோர் அரிட்டாபட்டி நோக்கிச் சென்றோம். சில நண்பர்கள் தங்களுடைய
சிற்றுந்துகளில் எங்களோடு வந்தனர்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)