மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் அமைந்துள்ளது யானைமலை. சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், காரைக்குடி என மதுரையின் வடக்கு பகுதியில் இருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பொழுது யானைமலையை பார்த்திருப்பீர்கள். ஒத்தக்கடை சிற்றூரானது இம்மலையின் இடப்புறமான தெற்கு திசையில் உள்ளது. மதுரையின் புகழ்மிக்க சான்றுகளில் யானைமலையும் ஒன்று. இம்மலையின் மேற்கு திசையில் அமைந்துள்ளது லாடன் குடைவரை கோவில். சென்ற வாரம் இக்குடைவரையை பார்ககச் சென்று வந்தேன்.
லாடன் குடைவரை முற்பாண்டியர் கால கலைப்பாணியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்தது. திறந்தவெளியில் ஒரு கோவில் எப்படி இருக்குமோ அதேபோன்று கருவறை, சன்னிதானம் போன்றவை மலையை குடைந்து வெட்டி செய்துள்ளனர். பார்பதற்கே அதியசமாக உள்ளது. இக்குடவரையை செய்து முடிக்க எத்தனை நாட்களானதோ. உள்ளே உள்ள ஒரு சிறிய கருவறையில் முருகன், தெய்வானையுடன் அமர்ந்திருக்கிறார். கண்ணிமாலையும், சன்னவீரமும் இங்குள்ள சிற்பத்தை முருகன் என அடையாளம் காட்டுகின்றன. முன்மண்டபத்திலுள்ள சேவலும், மயிலும் காட்சி தருவது கருவறையிலிருக்கும் சிலை முருகனே என்று ஆதாரமளிக்கிறது.