4 மார்., 2012

மன அழுத்தம் பெரிய சுமை...

இன்றைய வாழ்க்கைச் சூழலில் மன அழுத்தத்துடனேயே... சேர்ந்து வாழ்ந்து வருபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மருத்துவ ஆய்வுகள் பலத் தெரிவிக்கின்றன. மன அழுத்தத்தை குறைக்க பலர் யோகா செய்வதும், விளையாடுவதும், கடற்கரைகளுக்கு செல்வதும், திரைப்படங்கள் பார்ப்பதும் என பல முறைகளை கையாளுகின்றனர். ஆனால் இவற்றை விடவும் சிறந்த ஒருவழி மூலம் நாம் நமது மன அழுத்தத்தை குறைக்க முடியும். அது பல இடங்களில் நாம் கண்ட கண்ணாடித் தொட்டிகளில் இடதும், வலதுமாக நீந்திச் விளையாடிச் செல்லும் வண்ணமீன்களை காணுவதால்.

இல்லங்களில் பலர் வண்ணமீன்கள் வளர்பதைப் பார்த்திருப்போம். அதுபோன்ற இல்லங்களுக்கு நம் குழந்தைகளுடன் செல்லும் பொழுது, குழந்தைகள் அந்த மீன்களை ஆர்வமாகப் பார்பதும், பிறகு தனக்கும் அது போன்று மீன்கள் வேண்டும் என்பதைக் கேட்டிருப்போம். ஆனால் வண்ணமீன்கள் வளர்ப்பு என்பது சிறு குழந்தைகளுக்கு மட்டுமில்லாமல், அனைத்து வயதினரும் ரசிக்கும் ஒன்றாகவே இருந்து வருகிறது. வண்ணமீன் வளர்ப்பு என்பது ஒரு கலை. கண்ணாடித் தொட்டிகளில் நீந்தும் மீன்களை பார்த்தாலே மனதில் அமைதி குடியேறும். அழகிற்காக மட்டுமின்றி மன அமைதிக்காகவும், உற்சாகத்திற்காகவும் மீன்களை பலர் வளர்க்கின்றனர்.

இல்லங்களில் இவை அழகு அம்சமாக இடம் பெறுகின்றன. வெளியில் சென்று மன அழுத்தத்தோடு  இல்லம்  திரும்பும் நிலையில் இந்த மீன்களின் விளையாட்டைச் சிறிது  நேரம் பார்த்துக்  கொண்டிருந்தால் போதும் மன அழுத்தம் குறைவதும்ரம்மியமான சூழல் மனதில் ஏற்படுவதும் இயற்கையேமருத்துவர்கள் பலரும் இதனையேப் பரிந்துரைக் கின்றனர்.

வண்ணமீன்களை கண்ணாடித் தொட்டிகளில் வளர்ப்பதே சிறந்தது. இதில் மீன்களை பார்க்கும் போது... மீன்களின் முழு உடலும் அழகாக அதன் வண்ணத்தைப் பிரதிபலிக்கின்றது. அதுவும் கோல்ட் பிஷ் எனும் தங்க மீனின் வயிற்றைப் பாருங்கள், குண்டாக... கொழுக் மொழுக்கென்று ஒரு துருதுருப்புடன் முக்கோண வடிவ வால்களை ஆட்டிக் கொண்டும், அழகான வாய்களை மூச்சிற்க்காக திறந்து மூடுவதும் ரசிக்கத்தக்கதாகும். ரசித்தவர்களுக்கு தெரியும் அதன் அருமை.


கூழாங்கற்கள், சிப்பிகள், மரம், செடி போன்ற வேலைபாடுகளுடன் மீன் தொட்டியை அமைக்கும் பொது, மீன்களுக்கும் இயற்கையான வாழ்க்கைச் சூழலை நம்மால் தரமுடிகிறது. அந்த இயற்கை சூழலில் மீன்கள் நீந்திச் செல்வதைப் பார்க்கும் போது நம் மனதில் எழும் ஒரு அமைதியே... மருத்துவர்கள் கூறும் மன அழுத்தத்திற்கான சிறந்த மருந்து. இது போன்ற மீன் தொட்டிகளை பெரிய உணவு விடுதிகளில், மருத்துவ மனைகளில் வைத்துள்ளதைப் பார்த்திருப்போம்.

இன்று வசதி படைத்தவர்களால்தான் வண்ணமீன்கள் வளர்க்க முடியும் என்ற சூழல் இல்லை. நடுத்தர மக்களாலும் வளர்க்க முடியும் என்பதால் மீன்களை வாங்கி வளர்க்கத் தொடங்கியுள்ளனர். ஒரு சில இல்லங்களில் குழந்தைகள்... கண்ணாடி குவளைகளில், சிமெண்ட் தொட்டிகளில், சிறிய கண்ணாடித் தொட்டிகளில் அவர்களுக்கேற்ற விலைகளில் கிடைக்கும் மீன்களை வாங்கி வளர்பதை நாம் அனைவரும் பார்த்திருப்போம். விலைக் குறைவானகப்பீஸ்எனும் ரக மீன்கள், வெள்ளி மீன்கள், தங்க மீன்கள், தேவதை மீன்கள், மோலி, பிளாட்டி, வால்மீன்கள் என பலவகையான மீன்களை வளர்கின்றனர்.

மீன் தொட்டியின் விலை 100 ரூபாய் முதல் ஆரம்பமாகி பல ஆயிரங்கள் வரை செல்கிறது விலை. தொட்டியை இயற்கையாக அலங்கரிப்பதற்காக மரம், செடி பொம்மைகள், வண்ண வண்ண கூழாங்கற்கள் என பல விற்கப்படுகிறது.

வீடுகளில் வைப்பதற்கென்று விலைகுறைவானகலைநயம் மிக்கத் தொட்டிகளும் உள்ளன. மீன் தொட்டிக்குள் சின்ன சின்ன பாறைகள்கூழாங்கற்கள்செடிகள் போன்றவற்றை கொண்டு அழகுபடுத்தினால்தான் அவை அதற்குரிய இடங்களில் வசிப்பதைப் போல உணரும்.

இந்த வண்ண மீன்களுக்கான உணவு பாக்கெட்டுகள் கடைகளில் எளிதாகக் கிடைக்கின்றன. விலையும் சொற்பமே. இந்த மீன்களுக்கு என்று தனியாக உணவுகள் உள்ளன. தையோடோக்கியோட்ராகோ போன்ற பிராண்டட் உணவுவைட்டமின் உணவுபதப்படுத்தப்பட்ட டிரை வார்ம்ஸ் என்று பல வகைகள் உள்ளன. காலை ஒரு முறை மாலை ஒரு முறை என்று உணவளித்தால் போதும்.

மீன் தொட்டிகளால் சுகாதாரச் சிர்கேடுகொசு பரவுவதாக சிலர் புகார் தெரிவிப்பதுண்டு. அது தவறு. மீன்களின் முக்கிய உணவு கொசுவின் லார்வா. எனவே இயற்கையாகவே கொசுக்களின் உற்பத்தியை இவை தடை செய்யக்கூடியவை என்பது குறிப்பிடத்தக்கது.

மீன் தொட்டியில் உள்ள தண்ணீரை  15  நாட்களுக்கு ஒரு முறை வெளியேற்றி,   புதிதாக தண்ணீர் விடவேண்டும். அப்பொழுதுதான் மீன்கள் ஆரோக்கியமாக இருக்கும். மீன்களை வடிகட்டி நல்ல நீரில் பாதுகாப்பாக வைத்தபின்னர் தண்ணீரை வெளியேற்றி தொட்டியை கழுவவேண்டும்.

தொட்டிகளில் உள்ள வேஸ்டான செடிகளை அகற்றிவிட்டுபின்னர் தண்ணீரை நிரப்பி அழகு படுத்திய பின்னர் மீன்களை மறுபடியும் தொட்டியில் விடவேண்டும். அடிக்கடி மீன் தொட்டியை சோதனை செய்து அதன் ஆரோக்கியத்தை பராமரிப்பதும் அவசியம்.

மேலும் பலர் வாஸ்து என்பதற்காகவும், செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையுடன் வளர்க்கின்றனர். நமக்கு அது... பற்றியெல்லாம் தெரியாது... நாம் இதனை ஒரு அன்பின் வெளிப்பாடாகவும், ரசனையாகவும், மீன்களின் தோழனாகவுமே பார்ப்போம். ரசிப்போம். மன அழுத்தங்களில் இருந்து விடுபடுவோம். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக