24 ஜூன், 2012

கலைகளைப் போற்றுவோம்...

”  அழிந்த கலைகளை மீட்பதும்,

    நலிந்த கலைஞர்களை காப்பதும் நமது கடமை..  ”

தமிழில் கலை என்பதற்கு கற்றற்கு உரியவை எல்லாம் கலை என்ற பொது வரையறை தரப்படுகிறது. எனினும் உணர்ச்சியும் கற்பனையும் கொண்டு வளர்ந்த ஓவியம் முதலியவற்றை மட்டுமே கலை என்று சிறப்பித்து வழங்குதல் பொருந்தும் என்னும் தமிழ் அறிஞர் மு.வரதராசனாரின் கூற்று இங்கு குறிப்பிடத்தக்கது. பொது வழக்கிலும் மு. வரதராசனாரின் கூற்றுக்கமையவே கலை என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்தாலும், தற்போது அந்த வழக்கம் பழைய கற்றலுக்கு உரியவை எல்லாம் கலை என்ற பொருளிலும் எடுத்தாளப்படுகின்றது.

இந்த சொல்லாடல் குழப்பத்தை தவிர்க்கக்  கலை  என்ற சொல் உணர்ச்சிக்கும் கற்பனைக்கும் முக்கியத்துவம் தரும்  கவின் கலைகள் (asthetic arts) என்றும், நுட்பத்துக்கு முக்கியத்துவம் தரும்தொழில் நுட்பக் கலைகள் என்றும் இரு பெரும் வகையாகப் பிரிக்கலாம். கவின்கலைகளை  அரங்காடல் கலை, எழுத்துக்கலைகட்புலக் கலை என்று மேலும் பிரிக்கலாம்.

அரங்காடல் கலைகள் (நிகழ் கலைகள்):  நடனம்இசைநாடகம்சொற்பொழிவு, தற்காப்பு.

எழுத்துக் கலைகள்: கதை, கவிதை, கட்டுரை, நாடகம்

கட்புலக் கலைகள்: ஓவியம், சிற்பம், ஒளிப்படம்

எக்கலையானாலும் அதற்குரிய கலைப் பின்புலம் (கலை பற்றிய அறிவு, அழகியல் பார்வை), செய்திறன், சமூகப் பயன்பாடு என்பன இருக்கும். எனினும் இது கலை, இது கலை அல்ல என்று எச்செயற்பாட்டையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாது. மேலும் கலை சமூகம் சார்ந்ததாகவும் இருக்கின்றது. அதாவது, பொருள் படைத்தவர்கள் கலை, பொதுமக்கள் கலை, அல்லது இன அடிப்படையிலான கலை என பல சமூகத் தாக்கங்களும் கலைக்கு உண்டு. எனவே கலை பல நிலைகளிலும், பல்வேறு தளங்களில் ஆயப்படவேண்டிய ஒன்று.

கலைகளை வெறும் பொழுதுபோக்காகவன்றி மானுடத்தை வாழ்விக்கும் நல்ல கருத்துக்களையும் பொருத்தமாக இணைத்து, கலைத்துவமாய் வழங்கும்போது அவை உன்னதம் பெறுகின்றன. சுவைஞர்களைப் பெரிதும் ஆட்கொண்டு விடுகின்றன.

அப்படிப்பட்ட கலைகள் பற்றிய கருத்துகள் நம்மிடத்தில் உள்ளதா? என்ற கேள்விக்கு சரியான பதில் இருப்பதில்லை. ஏனென்றால், இன்றைய நாகரீக வாழ்க்கைப் பயணத்தில், இது போன்ற பழைய நமது கலைகள் மீது நமக்கு ஆர்வம் இருப்பதில்லை. மாறாக மேற்கத்திய நாடுகளின் இசைகளிலும், கலை, பண்பாடுகளிலும், ஆடை அலங்காரங்களிலும், விளையாட்டுகளிலும் தான் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதன் விளைவாக தமிழர்களின் கலைகள் பல நலிவுற்றும், அழிந்தும் போயுள்ளது.

தமிழர்களின் கலை நிகழ்ச்சிகளை இப்பொழுதெல்லாம் தமிழ் ஆர்வலர்கள், தமிழ் கலைபாதுக்காப்பு பேரவைகள் போன்ற சில அமைப்புகளே அவ்வபோது மக்கள் மத்தியில் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி இக்கலைகளை பாதுகாத்து வருகின்றனர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தினர் நடத்தும்கலை இரவுநிகழ்ச்சிகளை பலரும் பார்த்திருக்க வாய்ப்புண்டு. இந்த அமைப்பு தமிழர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு முக்கியதுவம் கொடுத்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டு பாசறையின் சார்பில் 23.06.2012 காரிக்கிழமை (சனி) அன்று மதுரை அரசரடி யு.சி. பள்ளி திடலில்தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு திருவிழா’  வெகு சிறப்பாக நடத்தப்பட்டது.

விழாவில் பழந்தமிழர் கலைகளான தமிழிசை, கோலாட்டம், ஒயிலாட்டம் விழாவில் பழந்தமிழர் கலைகளான தமிழிசை, கோலாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், மாடாட்டம், சிலம்பாட்டம், பொய்க்கால் குதிரை, பொய்க்கால் ஆட்டம், சுருள்வாழ் சுழற்றல், கரகாட்டம், தீப்பந்த வீரவிளையாட்டு, பறையாட்டம், புலியாட்டம், மற்றும் பல்வேறு கலை சாகசங்களும் உள்ளிட்ட கிராமிய தமிழர் கலைகள் அனைத்தும் நிகழ்த்தப்பட்டன.

திரைப்பட இயக்குனர் இகோரின்மீட்கப்பட்ட தாய்நாடகம் திரைப்பட இயக்குனர் ஐகோவின்கருப்புகுரல் நடன நிகழ்ச்சிபுதுவை சித்தன் ஜெயமூர்த்தியின்இன எழிச்சிபாடல்கள்சிதம்பரம் சிறிமுட்லூர் தெய்வநாயகம் கிராமிய எழுச்சிப்பாடல்கள் கருமாத்தூர் புதிய திசைகளின்முல்லை பெரியாறு நாடகம்’ விடுதலை நடவு கலைக்குழுவின்கிராமிய நிகழ்ச்சிஎன விழா தமிழர்களின் கலை இலக்கிய பண்பாட்டு சிறப்புக்களை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.

2 கருத்துகள்: