31 மே, 2013

விதையிலிருந்தே மரம்... பகுதி - 2

காலை ஆறு மணிக்கு எழுந்து குழுவினர் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளிக்கச் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் இயற்கை நிரம்பி வழிந்தது. அருவியில் இருந்து விழுந்த மூலிகை தண்ணீரில் அற்புத குளியல். நீரின் குளிர்ச்சி உடலை சில்லிட செய்தது. உடம்பில் இருந்த சூடெல்லாம் இறங்கியது போல் ஒரு உணர்வு. அருவி குளியலோடு இரண்டாம் நாள்  நனைய துவங்கியது.


அருவி குளியலிற்கு பின் பயிற்சி பட்டறையில், காலை உணவாக பதனியும், சோள தோசையும், தக்காளி சட்டினியும் வயிற்றுக்குள் இறங்கியது. ஒரு கடுங்காப்பியை கையில் பிடித்து கொண்டு பயிற்சிப் பட்டறையில் அமர்ந்தேன். சுற்றுச்சூழல் எழுத்தும், இதழியலும் குறித்து முனைவர் அருள் செல்வனும், தேசிய நீர் வரைவுக் கொள்கை குறித்து வழக்கறிஞர் வெற்றிச்செல்வனும், பெண்ணிய சூழலியல்ஓர் அறிமுகம் குறித்து கவிதா முரளிதரன், கவின்மலர், சுகிதா ஆகிய மூவரும் பேசினர்அவர்களைத் தொடர்ந்து ஒரிசா மாநிலத்தில் உள்ளபாஸ்கோ’ நிறுவனம் மூலம் பாதிப்படைந்த பழங்குடியினர் குறித்து எழுத்தாளர் . முத்துகிருஷ்ணன் பேசினார். இரண்டாவது நாள் மதிய உணவாக சீரக சம்பா சாதம், ஆத்து மீன் குழம்பு, மீன் வறுவலுல், பாயசம், வாழைப்பழம் என சூழலியல் குறித்த உரையோடு உணவும் ருசியாக அமைந்தது.

மதிய உணவிற்க்கு பிறகு மீண்டும் பயிற்சிப் பட்டறை துவங்கியது. தொடர்ச்சியாக ஒரே குறிப்புகள், நிகழ்வுகள் மற்றும் அது குறித்த கேள்வி பதில்கள் என பயிற்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. மூனரை மணியளவில் குழுவினர் அனைவரையும் பூவுலகின் நண்பர்கள் அருகிலிருந்த காரையார் அணை செல்லும் வழியில் உள்ள பார்வை கோபுரத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்து பொதிகை மலையின் அழகையும், மாஞ்சோலை கிராமம் அமைந்துள்ள மலைப் பகுதியையும் கண்டு ரசித்தோம். அங்கேயே குழுவினர் அனைவரும் இணைந்து நிழற்படம் எடுத்துக்கொண்டு, எங்களது வருகையை மலைகளோடு சேர்ந்து பதிவு செய்து கொண்டோம்.

பார்வை கோபுரத்திலிருந்து காரையார் அருகேயுள்ள காணிப் பழங்குடியினர் வசிக்கும் இடம் நோக்கி காட்டு வழியாக ஒரு நீண்ட நடைபயணம். அடர்ந்த காடுகளுக்கிடையே பயணம் என்பதால் பாதுகாப்பிற்க்காக வனத்துறையை சேர்ந்ததபோவன்’ என்னும் நண்பர் வழிகாட்டியாக எங்களுடன் வந்தார்காட்டின் நடுவே அழகிய சிற்றாறு ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. ஆற்றின் ஓரமாக அனைவருக்கு சுண்டலும், கடுங்காப்பியும் வழங்கப்பட்டது. சிறிது ஓய்விற்கு பிறகு நடை தொடர்ந்தது. ஆற்றைக் கடக்க இரும்பு பட்டைகளாலான பாலம் உதவியது.



அந்தி மங்கியும் பழங்குடியினர் வசிக்கும் இடத்தை அடைந்த பாடில்லைசெல்லும் வழியெங்கும் ஓங்கி, உயர்ந்து வளர்ந்திருந்த மரங்கள், இருள் என ஆங்கிலத் திரைப்படத்தின் அனுபவத்தை தந்தது. வழியெங்கும் யானை, கரடியின் கால் பதிந்த தடங்களையும் அவற்றின் சாணங்களையும் காண  முடிந்தது. பாம்பு ஒன்று கழட்டிய தோலயும், கருந்தேள் ஒன்றையும் வழியில் பார்த்தோம். நடை பயணத்தில் நம்மோடுகிலிதொத்திக்கொண்டது.

வழியில் சொறிமுத்து அய்யானார் கோவிலும், அதையொட்டிய சிறு கிராமத்தில் உள்ள குன்றில் சற்று ஓய்வெடுத்தோம். குன்றில் அரிய வகைத் தாவரமான ’சூசன் - ஹோம் கள்ளி மரங்கள்’ நிறைய இருந்தது. மீண்டும் பயணம் தொடர்ந்தது. செல்லும் வழியில் ஆறு ஒன்று கண்ணில்பட்டதுமருத்துவர் மைக்கேல் மீண்டும் சிறிது நேர ஓய்வு தந்து, குளிக்க ஆசைப்படுபவர்களுக்கு பச்சைக் கொடி காட்டினார். அந்த இருளிலும் நண்பர்கள் சிலரோடு கால் மணி நேர குளியலை முடித்து கொண்டு மீண்டும் பயணம் துவங்கியது. 1 கி.மீ தூரத்தில் இருந்த காணிப் பழங்குடியினர் வசிக்கும் இடத்தைச் சென்றடைந்தோம்.

இந்த பயணத்தில் காணிப் பழங்குடியினரை பற்றியும், அடிப்படைத் தேவைகள் கூட கிடைக்கப் பெறாத அவர்களுடைய வாழ்க்கை முறை பற்றியும் அறிந்து கொள்ள முடிந்தது. அவர்களின் வாழ்வியலைப் பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம். மின் உற்பத்திக்காக கட்டப்பட்ட காரையார் அணைக்கு அருகில் வாழும் இவர்களுக்கு மின்வசதி இல்லை என்பது மனதை வருத்தியது. நீண்ட நேர நடைபயணம், ஆற்றுக்குளியல் வயிற்றில் பசியை கிள்ளியது. இரவு உணவை நினைத்துக் கொண்டிருக்கும் போதே கப்பை கிழங்கும், திணை மாவும் கிடைத்தது. நண்பர்கள் அனைவரும் இங்கு வந்து சேரும் முன்னரே சமையல் ஆட்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கல் சிலரும் முன்னக்கூடிய இங்கு வந்து இரவு உணவை தயார் செய்திருந்தனர்.

இரவு உணவை முடித்துக் கொண்டு இரவில் காணிப் பழங்குடியினரின் குடியிருப்புகளுக்கு மத்தியில், மரங்களினூடே அனைவரும் அமர்ந்தோம். பெட்ரோமாக்ஸ் லைச் ஒன்றும் எங்களுக்கு முன்னாக வந்து அமர்ந்தது. நண்பர்கள் பழங்குடி மக்களின் தலைவர், மற்றும் கிராமத்தார் சிலர் நம்முடன் சேர்ந்து அமர்ந்தனர். அவர்களுடைய வாழ்வியல் முறைகளையும், கிடைக்காத பல அடிப்படைத் தேவைகளைப் பற்றியும் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். இன்றைய நாகரீக உலகத்திலும் அடிப்படைத் தேவைகள் கிடைக்காத வாழ்வியலில் வாழ்ந்து வருகின்றனர் காணிப் பழங்குடியினர்.

அவர்களின் வழிப்பாடு, கொண்டாட்டங்கள், சுப நிகழ்ச்சிகளில் வாசிக்கும் ‘கொக்கரா’ இசைக் கருவியை நம்மிடம் வாசித்தும், அத்தோடு இணைந்து நாட்டுப்புற பாடல் ஒன்றை பாடியும் காட்டினர். இரவுத் தாலாட்டாகப் காணிப்பழங்குடியினரின் கொக்கரா’ இசை நிகழ்ச்சி அமைந்தது. பின்னர் இரவில் அனைவரும் வெட்ட வெளியில், மண்ணில் கிடைத்த இடத்தில் கொண்டு வந்த போர்வைகளை விரித்து படுத்து உறங்கியது மறக்க முடியாத அனுபவம். இருள் சூழ்ந்த காட்டில் காட்டு விலங்குகளோடு இணைந்த காணிப்பழங்குடியினரின் வாழ்வியலோடு இருந்த போது ஏதோ இனம்புரியாத அச்சமும், அமைதியும் மட்டுமே பதிலாக நமக்கு கிடைத்தது. அவர்களின் கோரிக்கைகளுக்கும் அரசிடமிருந்தும் அதே அமைதிதான் இன்று வரை பதிலாகக் கிடைத்து வருகிறது. இருளில் நாம் கரைந்து கொண்டிருக்க, மனம் மட்டும் விழிந்திருந்து அச்சத்தில்.

மேலும் படிக்க:

விதையிலிருந்தே மரம்... பகுதி - 1

விதையிலிருந்தே மரம்... பகுதி - 3

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக