மலைகளைக் காண்பது
என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன்
மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த
பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு
அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள்
பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது
ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.
27 அக்., 2013
26 அக்., 2013
மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...
மதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)