மலைகளைக் காண்பது
என்பது எனக்கு மிகவும் பிடித்தவைகளில் ஒன்று. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன்
மலைகளை கண்டு வருவது வாடிக்கையாக இருந்தது. மதுரை மாநகரும் நான்கு பக்கமும் மலைகள் சூழ அமைந்துள்ள பெரும் வரலாற்று புகழ் வாய்ந்த
பகுதி. இம்முறை மதுரையிலிருந்து தேனி - கம்பம் செல்லும் நெடுஞ்சாலையில் செக்காணூரணிக்கு
அருகேயுள்ள கொங்கர் புளியங்குளத்திற்கு சென்று வந்தேன். காரணம் இம்மலையில் 2000 வருடங்கள்
பழமையான தமிழிக் கல்வெட்டுகள் இருப்பது என்பதே. விடுமுறை நாளான ஞாயிறு காலை பொழுது
ஒன்றில் நண்பர்களோடு சென்றேன்.
27 அக்., 2013
26 அக்., 2013
மனிதர்கள் மரங்கள் போல் வாழும் காலம் வரும்...
மதுரையில் நண்பர் ஒருவரின் திருமண விழாவிற்க்காக நானும் நண்பரும் சென்றிருந்தோம். மண்டபத்தின் வாயிலில் மணமக்களின் பெயர்கள்கள் அழகாக வடிவமைக்கபட்டிருந்தது. உள்ளே நுழைந்ததும் பெண்கள் கூட்டம் நம்மை சிரித்த முகத்துடன் வரவேற்றுக் கொண்டிருந்தது. சிரித்துக் கொண்டே நகர மனமில்லாமல் நகர்ந்தோம். அழகாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடை அரங்கில் மணமகனும், மணப்பெண்ணும் நின்றிருத்தனர்.
உறவினர்கள், நண்பர்கள் என அனைவரும் வரிசையாக மணமக்களுக்கு பரிசுகளை வழங்கியவாறு நிழற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். நாங்களும் இந்த சம்பிரதாயங்களை வரிசையில் நின்று முடித்துக் கொண்டு சாப்பாடு நடக்குமிடம் நோக்கிச் சென்றோம். கனிவான உணவு பரிமாறல்களுடன் அருமையான அறுசுவை உணவால் வயிறு நிறைந்தது. பால் பாயசத்தின் இனிப்பு நாவினில் கரையாமல் இருந்தது. சாப்பாடு அறையை விட்டு வெளியேறி அரங்கினுள் சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். அப்பொழுதான் அந்த காட்சியை காண முடிந்தது. அனைவரது கைகளிலும்,
24 செப்., 2013
திருவாதவூர் ஓவா மலையும் ஓயாத மனமும்...
மதுரை – மாட்டுத்தாவணி என்ற பெயர்ப் பலகையோடு பேருந்து நின்று கொண்டிருந்தது. அதிகாலை நேரமென்பதால் கூட்டம் ஒன்றும் இல்லை. காற்று கிடைக்கும் என்பதால், படியை ஒட்டிய இருக்கையில் ஒற்றையாளாய் ஒட்டிக் கொண்டேன். பேருந்து மெல்ல நகர்ந்தது. பயணம் துவங்கிய சில வினாடிகளில் நகர எல்லையைவிட்டு புறநகர் சுற்றுச்சாலையில் பேருந்து பாய்ந்து கொண்டிருந்தது, வேங்கையை போல. வெளியே செந்நிறத்தோடு காட்சி தந்துகொண்டிருந்தது அதிகாலை ஆகாயம். நாசி வழியாக ஈரப்பதம் நிறைந்த மெல்லிய காற்று மூச்சுக் குழலுக்குள் மென்மையாக சென்று கொண்டிருந்தது. முகமெல்லாம் சில்லென்று ஆகியது. நகர வாழ்க்கையில் வெயில்பட்டு வறண்ட முகத்தையும் தேகத்தையும் சில் காற்று முழுமையாய் அப்பிக் கொண்டிருந்தது.
9 ஆக., 2013
மரங்களில்தான் விளம்பரம் செய்யணுமா ?...
வெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும்.
எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து
விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா(?)
என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது.
தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன.
இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும்
அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’
இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை.
ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது?
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
