25 நவ., 2012

மேட்டுப்பட்டி சித்தர்மலையும் ’மதிரை’ கல்வெட்டும்...

அதிகாலை – மூடுபனி - குளிர். இப்படியாக கண் விழித்தது இன்றைய விடியல் பொழுது. சாலையெங்கும் லேசான பனி மூடியிருந்தது. இருசக்கர வாகனத்தில் திருமங்கலத்திலிருந்து செக்கானூரணி நோக்கி நண்பர்களுடன் பயணம். இளம் பனியின் குளுமைக்குள் செல்லும் அதிகாலைப் பயணத்தின் அனுபவம் அலாதியானது. இன்றைய பயணம் மதுரைக்கு மேற்கே நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள பேரணைப் பகுதியில் அமைந்துள்ள மேட்டுப்பட்டி நோக்கி.
அணைப்பட்டி என்னும் சிற்றூருக்கு அருகில் வைகையாற்றின் தென்கரையில் மகாலிங்கமலை என்றழைக்கப்படும் சித்தர்மலை உள்ளது. இம்மலையில் கி.மு 2’ம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழி (பிராமி) கல்வெட்டுகளும், கற்படுக்கைகளும் உள்ளன. 2000 வருட பழமையான ஒரு இடத்தின் வரலாற்றை அறிந்துகொள்ள சென்றோம். திருமங்கலம் -  செக்காணூரனி – விக்கிரமங்கலம் – பெருமாள்பட்டி வழியாக மேட்டுப்பட்டி நோக்கிச் செல்ல வேண்டும்.

31 அக்., 2012

அரசு பள்ளிகளை சுழற்றும் சாட்டை...

இன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய திரைப்படங்கள் என்பது பழைய ’கூத்தின்’ மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதையும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.

14 அக்., 2012

திருமலாபுரம் ’பசுபதேஸ்வரர்’ குடவரை கோயில்...


பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்துடன் இணைந்து வரலாற்றுப் பயணமாக மதுரையிலிருந்து கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா சென்று வந்தோம். பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவில், வீரசிகாமணிக்கு அடுத்து நான்காவதாக திருமலாபுரத்திற்கு சென்றோம். திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சி - சேந்தமரம் சாலையில் கல்லிடைக்குறிச்சியில் இருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருமலைப்புரம் எனப்படும் திருமலாபுரம்.
திருமலாபுரத்தில் முற்பாண்டியர் காலத்தைச் சேர்ந்த (கி.பி 750) இரண்டு குடைவரை கோயில்கள் அமைந்துள்ளன. திருமலாபுரம் சிற்றூரின் ஊருக்கு வெளியே தெற்குப் பகுதியில் மிக பெரிய நீண்ட மலைக் குன்றுத் தொடர் காணப்படுகிறது. இந்த மலைக்கு ’வருணாச்சி’ மலை என்று பெயர். இவ்வூருக்கு முன்பு வருணாச்சிபுரம் என்ற பெயர் இருந்துள்ளது.

13 அக்., 2012

வீரசிகாமணி கைலாயநாதர் குடைவரை கோயில்...

தலைப்பைச் சேருங்கள்
பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் வரலாற்றுப் பயணமாக கழுகுமலை, சங்கரன்கோயில், வீரசிகாமணி, திருமலாபுரம் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகிய 5 இடங்களுக்கு ஒரு நாள் சுற்றுலா செல்லும் பயணத்தில் கழுகுமலை, சங்கரன்கோவிலுக்கு அடுத்து மூன்றவதாக வீரசிகாமணிக்கு சென்றோம். சங்கரன்கோவிலுக்கு வடமேற்கே பத்து மைல் தொலைவில் வீரசிகாமணி அமைந்துள்ளது.
வீரசிகாமணி ஊருக்கு அருகிலுள்ள பெரிய மலைக்குன்றில் குடைவரைக் கோயில் உள்ளது. இக்கோயிலில் காணப்படும் சிவனுக்கு கயிலாயநாதர் என்ற பெயர்.  குடைவரைக் கோவிலுக்கு வெளியே சுற்றுச்சுவர் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் கருவறைக்கு நேர் எதிரே உள்ள மேடையில் நந்தி சிலை வைக்கப்பட்டுள்ளது. கைலாயநாதர் கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. குடவரையில் வெளிப்பகுதி மற்றும் முன் மண்டபம் முழுவதும் வெள்ளை மற்றும் காவி வண்ணங்கள் பூசபட்டிருந்தன.