காலை நேரம். கோடைக்கால வெயில் மாதங்களில் ஒன்று. சாலையெங்கும் பனிமூடியது போல வெண்முகில் கூட்டம். விடிந்தும் விடியாது போல இருந்தது. மக்கள் அனைவரும் சாலைகளில் வெள்ளம் போல மாநகர் மற்றும் புறநகர் நோக்கியும் வாகனங்களில் பயணபட்டு கொண்டிருந்தனர். பலரது முகங்களில் மூக்கையும் வாயையும் மூடியவாறும், தலையை மூடியவாறும் கைகுட்டைகள் கட்டப்பட்டிருந்து.
15 ஜன., 2015
27 ஜூலை, 2014
மாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...!
சமீபத்தில் கிடைத்த வாய்ப்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன். இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்து முடிப்பதற்கே பல மணி நேரம் எடுத்தது. சோழிஸ்வரர் கோவிலின் அழகை மனது நிறையும் அளவு கண்டு ரசித்தேன். பின் அங்கிருந்தவர்களிடம் அருகில் சுற்றிப்பார்பதற்கு வேறேதும் இடங்கள் இருக்கின்றதா என்று கேட்ட பொழுது மாமன்னன் இராஜேந்திர சோழனது மாளிகைப் பகுதி ஒன்று உள்ளது என்றனர். அந்த மாளிகைப் பகுதியை தேடிச் சென்றேன்.
6 ஜூலை, 2014
‘குடிசெட்லு’ நடுகற்கல்...
கடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்ற ’நடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.
1 ஜூன், 2014
சுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...
ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் ’சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு’ என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ள ’ஐக்கிய நாடுகள் அமைப்பு’ ஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)

