இன்றைய வாழ்வில் சமூகத்தை நோக்கி பலத்திரைப்படங்கள் வந்த வண்ணமாக இருக்கின்றன. அதில் ஒன்றோ, இரண்டோ சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக அமைகின்றன. பலத் திரைப்படங்கள் பொழுதுபோக்கு அம்சமாக வந்து செல்கின்றன. திரைப்படங்கள் என்றாலே நம் மனதுக்கு மகிழ்ச்சி தருவாத இருக்க வேண்டும் என்பது இன்றைய அனைவரது கருத்து. உண்மைதான் ஏற்றுக்கொள்ள வேண்டிய கருத்து.
இன்றைய திரைப்படங்கள் என்பது பழைய ’கூத்தின்’ மேம்பட்ட வடிவமே. கூத்துப் பட்டறையில் இருந்து வந்து வெற்றி பெற்று சாதித்த நடிகர்கள் இன்றும் திரையில் வலம் வந்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்திருப்போம். பழைய கூத்தில் நடனத்துடன் கூடிய கதையும், அதில் சிலக் கருத்துக்களும் அமைந்திருக்கும். கூத்தில் இருந்த கலை நயங்கள், கருத்தம்சங்கள் இன்று திரைப்படங்களில் சற்று குறைந்து வருகிறது.