5 ஏப்., 2016

தேவன்குறிச்சியில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள்

திருமங்கலத்திற்கு அருகிலுள்ள தே.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் உள்ளது தேவன்குறிச்சி சிற்றூர். இங்குள்ள மலைக்கு அருகில் உள்ள அக்னீஸ்வரர் - கோமதியம்மன் கோவிலில் கி.பி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சில உள்ளன. இதில் இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை.

6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளை இணையதளம் மூலமாக  படித்து அறிந்துக்கொண்ட பின் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்  அதிகமானது. 
நண்பர்களுடன் தேவன்குறிச்சிக்கு சென்ற வாரம் சென்று வந்தேன். காலை வேளையில் சென்றால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் 6 மணியளவில் இருசக்கர வாகனங்களில் புறப்பட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை. வழியெங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருந்தது. சிறு குளங்களிலெல்லாம் நீர் நிறைந்து காணபட்டது. குளங்களில் சாம்பல் நாரை, நத்தைகொத்தி, வெண் கொக்கு, மீன்கொத்தி, பனங்காடை, கரிச்சான்குருவி என பறவைகள் நிறைந்திருந்தன. 

20 மார்., 2016

முத்துப்பட்டி பெருமாள்மலையும் சமணமும்

மதுரைக்கு அருகே உள்ள மலை ஒன்றில் 2000 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள கல்வெட்டுகள் உள்ளன பார்க்க வருகிறாயா ? என மைத்துனரிடம் இருந்து அழைப்பு வந்துது. 2000 வருட பழமை என்றால் நிச்சயம் மிகவும் முக்கியம் வாய்ந்த நிகழ்வை தாங்கி இருக்கும் என்பதால், சரி என்றேன். எப்போது பார்க்க செல்கிறோம் என்றேன். நாளை காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்துவிடு என்றார். 

மறுநாள் காலை 5 மணிக்கெல்லாம் தயாராக பேருந்து நிலையம் வந்தடைந்தேன். மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. சிறிது நேரத்தில் மைத்துனரும் அவரது இரு நண்பர்களும் இருசக்கர வாகனங்களில் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களோடு பயணத்தில் நானும் ஐக்கியமானேன். வழியெங்கும் மழைச்சாரல் அடித்துக் கொண்டே இருந்தது.

2 அக்., 2015

குன்னத்தூரும் சுப்பிரமணியர் மலை கல்வெட்டும்...

மதுரை - சிவகங்கை சாலையில் அமைந்துள்ளது வரிச்சியூர் எனும் சிற்றூர். வரிச்சியூரிலிருந்து வலது புறமாக செல்லும் சாலை .குன்னத்தூர் நோக்கிச் செல்கிறதுஇச்சாலையில் சுமார் 1 கி.மீ தொலைவில் சாலையின் வலதுபக்கம் உதயகிரி எனப்படும்சுப்பரமணியர் மலைஅமைந்துள்ளது. சுப்பரமணியர் மலையின் கிழக்கு திசையில் உதயகிரீஸ்வரர் எனும் குடைவரைக் கோயிலும் குன்றின் பின்புறம் அஸ்தகீரிஸ்வரர் எனும் குடைவரை கோயிலும் அமைந்துள்ளதுஇம்மலைக்கு சென்ற வாரம் நண்பர்களளோடு சென்று வந்தேன்.