2 மே, 2015

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 1

மலைகளுக்கும் எனக்குமான நெருக்கத்தில் மலைப் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒருபுதுவிதபுத்துணர்ச்சியையும், அனுபவங்களையும் தந்து கொண்டிருருகின்றன. இயற்கையின் படைப்புகளில் ஒன்றான மலைகளின் அழகை வெறும் வார்த்தைகளால் மட்டுமே வர்ணித்துவிட இயலாது. அதனை உள்ளார்ந்து ரசிப்பதே உன்னதம்.
இந்த ஆண்டுக்கான கோடைக்கால விடுமுறைப் பயணமாக திண்டுக்கல் மாவட்டதில் உள்ள தாண்டிக்குடி மலைப் பகுதிக்கு இரண்டாவது முறையாக எங்களது பசுமைநடைக் குழுவோடு இரண்டு நாள் (ஏப்ரல் 25 & 26) பயணமாக சென்று வந்தேன். பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாள 5000 கற்ப்பதுக்கைகள், கற்த்திட்டைகள் இருப்பதாக அப்பகுதி விவசாய பெருமக்கள் கூறுகின்றனர்.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக இப்பகுதிகளில் வாழ்ந்த தொல்பழங்குடி மக்களின் வரலாற்றுப் பெருமைகளை இங்கு வாழும் மக்களும், வந்து செல்லும் சுற்றுலா பயணிகளும் அறிந்துகொள்ள எந்த ஒரு வசதியும் இல்லை. எனவே இம்முறை தாண்டிக்குடி பகுதிகளில் உள்ள பெருங்கற்காலத்து தொல்லியல் சின்னங்களான கற்திட்டைகள், கற்ப்பதுக்கைகளின் முக்கியத்துவத்தை (DOLMENS & CIST BURRIALS) பற்றிய நிரந்தர வரலாற்றுக் புகைப்படக் கண்காட்சியை’ ஊர் மக்களோடு இணைந்து  தாண்டிக்குடியில் நிறுவது என்ற நோக்கத்தோடு பசுமைநடை குழுவினர் சென்றனர்.
பசுமைநடை பயணத்தில் இம்முறை புது நண்பர்கள் பலர் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். பசுமைநடை குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்தில் நண்பர்களோடு இணைந்து காலை ஆறு மணிக்கெல்லாம் பயணம் மதுரையிலிருந்து தாண்டிக்குடி நோக்கி துவங்கியது. அதிகாலையிலிருந்தே மழை லேசாக பெய்து கொண்டிருந்தது. பயணத்தின் துவக்கமே இயற்கையோடு இணைந்திருந்தது அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
சமயநல்லூர்வாடிப்பட்டிநிலக்கோட்டைவத்தலக்குண்டு என தாண்டிக்குடி நோக்கிப் பேருந்துப் பயணம் மழைக்காற்றோடும் இசையோடும் கலந்து சென்றது. செல்லும் வழியெல்லாம் நிலங்களும், மலைகளும் மழையில் தங்களை நனைந்திருந்தது. வாடிப்பட்டி அருகேயுள்ள சிறுமலை, வயிற்றுமலைப் பகுதிகள் மழையினால் சிறு அறுவிகள் உருவாகியிருந்தன.பயணத்தின் நினைவுகள் அனைத்தும் நாவில் கரையாத இனிப்பாக இன்னமும் தித்திக்கின்றது
இந்த ஆண்டு கோடைத் துவங்கிய நாளில் இருந்து லேசான சாரல், மிதமழை மற்றும் கனமழை என தென்தமிழகத்தை மழைத்துளிகள் அவ்வப்போது நனைத்துக் கொண்டிருந்தன. காலை நேரங்களில் தினமும் வெப்பத்தையே அனுபவித்த மதுரை உள்ளங்களுக்கு இந்த மழைக் காலநிலையும், மலைக் குன்றுகளை தழுவிச் செல்லும் மஞ்சுக் கூட்டத்தையும் காண்பது என்பது மனதிற்கு மிகுந்த உற்சாகத்தை தந்தது.
நீரால் நிரம்பியிந்த கண்மாய், குளங்கலெல்லாம் பறவைக் கூட்டத்தில் மூழ்கியிருந்தன. செல்லும் வழியெல்லாம் விவசாய நிலங்கள் அனைத்தும் நல் விளைச்சல் கண்டு, காணுமிடமெல்லாம் பசுமை பரவிப் படர்ந்திருந்தது. இந்த சூழல் என்றும் கிடைத்திட வேண்டும் என்று மனது இயற்கையிடம் பேசிக்கொண்டிருந்தது. இயற்கை அதற்கு என்ன பதில் கூறியது என்பதை பின்னால் பார்க்கலாம்.
வத்தலக்குண்டு பேருந்து நிலையத்திற்கு அருகே அனைவரும் தேநீர் அருந்தினோம். சில நிமிட ஓய்விற்கு பின் மீண்டும் பயணம் துவங்கியது. பேருந்து வத்தலக்குண்டைக் கடந்து மலையில் ஏறத் துவங்கியதும் காற்றின் ஈரப்பதம் இன்னமும் சற்று கூடியிருந்தது. செல்லும் வழியில் மஞ்சளாறு அணைக்கட்டையும், சுற்றியுள்ள தென்னந் தோப்புகளின் அழகையும் ரசித்தவாறே சென்றோம்.
மஞ்சளாறு அணையின் நீர் ஆதாரமானதலையறுவிமலைகளினூடே வெள்ளியை வார்த்து ஊற்றியதுபோல மலை மேலிருந்து விழுந்து கொண்டிருந்தது. சாலைவழியில் உள்ள (VIEW POINT) காணும் இடத்திலிருந்து குழுவினர் அனைவரும் தலையருவியின் அழகை கண்டு ரசித்தும், நிழற்படம் எடுத்தும் மகிழ்ந்தனர். தலையறுவி தான் தென்னிந்தியாவின் மிக உயரமான அருவி. இதன் உயரம் 297 மீட்டர் ஆகும். இந்தியாவின் மூன்றாவது உயர்ந்த அருவிதலையார்அருவி.
தாண்டிக்குடி செல்லும் வழியில்பண்ணைக்காடு’ என்னும் அழகிய மலைக்கிராமம் உள்ளது. விவசாயத் தொழிலுக்கு பெயர் பெற்ற கிராமம். இங்கு பீன்ஸ், காரட், கோஸ், முள்ளங்கி, மலைவாழை, ஆரஞ்சு என இன்னபிற குளிரான பகுதிகளில் விளையும் காய்கறிகளும் பழங்களும் பயிர்செய்யப்படுகிறது. பண்ணைக்காட்டில் இருந்து தாண்டிக்குடிக்கு செல்லும் வழியில்சங்கரன்பொத்துஎன்னுமிடத்தில் 30க்கும் மேற்பட்ட பெருங்கற்காலத்து கற்திட்டைகள் உள்ளன. காலைச் சிற்றுண்டியை சங்கரன்பொத்துவில் உள்ள மலையடிவாரத்தில் முடித்துக்கொண்டு குழுவினர் அனைவரும் கற்த்திட்டைகள் அமைந்துள்ள இடம் நோக்கிச் சென்றோம்.
மிகப்பெரிய கருங்கற்ப் பலகைகளால் இக்கற்திட்டைகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இக்கற்திட்டைகளில் காணப்படும் பெருங்கற்பலகைகள் அனைத்தும் மனிதசக்தியின் மூலமே நிறுவப்பட்டிருப்பது ஆச்சரியபடக்கூடிய ஒன்று. இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே இப்பகுதிகளில் மக்கள் வாழ்ந்துள்ளனர் என்பதை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. குழுவினர் அனைவரும் சங்கரன்பொத்துவில் அமைந்துள்ள அனைத்து கற்த்திட்டை களையும் பார்த்தோம்.
பசுமைநடைக் குழுவில் வந்திருந்த தொல்லியல் அறிஞர் முனைவர். செல்வக்குமார் (தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகம்) கற்த்திட்டைகளுக்கான வரலாற்றையும் அவற்றை ஏன் பாதுக்காக்க வேண்டும் என்ற கருத்துக்களையும், கற்காலத்து மனிதர்கள் இயற்கையின் மீது கொண்டிருந்த மரியாதையையும், மதிப்புகளையும் குழுவினரோடு பகிர்ந்து கொண்டார்

கற்த்திட்டைகள் பற்றிய வரலாற்றை அறிந்துகொள்ள இந்த சுட்டியை அழுத்தி படிக்கவும்கற்காலத்து கல்லறைகள்...
சங்கரன்பொத்துவில் இருந்து தாண்டிக்குடி வந்தடைந்ததும் பசுமைநடைக் குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விருந்தினர் மாளிகையில் அனைவரும் தங்கினோம். மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவிற்கு பின் விருந்தினர் மாளிகையில் சிறிது ஓய்விற்கு பிறகு பசுமைநடையின் ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தாண்டிக்குடியில் உள்ள துவக்கப் பள்ளிக்கு சென்றோம். அங்கு மறுநாள் 26.04.15 அன்று பசுமைநடைக் குழுவினரும் தாண்டிக்குடி ஊர் மக்களும் இணைந்து நடந்தும் தாண்டிக்குடியின் வரலாற்றுப் பெருமைகளை விளக்கும்புகைப்படக் கண்காட்சி’ க்கு தேவையான அனைத்து வசதிகளையும் மாலை நான்கு மணிக்குள் செய்து முடித்துவிட்டு தங்குமிடம் வந்தடைந்தோம்.

பசுமையான நினைவுகள் தொடரும்...

மலைப் பயணத்தின் நினைவலைகளின் தொடர்ச்சி.... தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக