31 மே, 2013

விதையிலிருந்தே மரம்... பகுதி - 3

மூன்றாம் நாள் காலை பொழுது புலர்ந்தது. விழித்ததும் மரங்களின் காட்சிகள் கண்களை குளிர்ச்சியாக்கின. சுக்கும் பனை வெல்லமும் கலந்த சூடான பானம் கிடைத்தது. அருந்திவிட்டு அருகிலிருந்த ஆற்றில் குளியல். ஆற்றைச் சுற்றிலும் பச்சை பசேல் என்ற காட்சி பரவியிருந்தது. ஆற்றைவிட்டு வர மனமில்லை. ஆற்றுக் குளியலுக்கு பயந்தவர்கள் கூட இயற்கை குளியல் வாய்ப்பைப் பயன்படுத்திக் குளித்து முடித்தனர். அங்கு குளிக்க வந்த சிறுவர்கள் பலர் ஆற்றில் கர்ணம் அடித்து அசத்தினர். குளியலை முடித்துவிட்டு தங்குமிடம் வந்தடைந்தோம்.  

விதையிலிருந்தே மரம்... பகுதி - 2

காலை ஆறு மணிக்கு எழுந்து குழுவினர் அனைவரும் அகஸ்தியர் அருவியில் குளிக்கச் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் இயற்கை நிரம்பி வழிந்தது. அருவியில் இருந்து விழுந்த மூலிகை தண்ணீரில் அற்புத குளியல். நீரின் குளிர்ச்சி உடலை சில்லிட செய்தது. உடம்பில் இருந்த சூடெல்லாம் இறங்கியது போல் ஒரு உணர்வு. அருவி குளியலோடு இரண்டாம் நாள்  நனைய துவங்கியது.

விதையிலிருந்தே மரம்... பகுதி - 1

இராஜபாளையம் - தென்காசி வழியாக மேற்குத் தொடர்ச்சி மலைகளை ரசித்தபடியே பாபநாசம் நோக்கி அதிகாலையில் பயணம். வழியெங்கும் தலை சாய்ந்த நெற்கதிர்கள், வரப்பையொட்டிய தென்னை மரங்கள், இடையிடையே தென்னெந்தோப்புகள். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சை போர்வையை விரித்தாற்போல் எங்கும் பசுமை. கண்களுக்கு குளிர்ச்சியும், மனதிற்கு அமைதியும் போதுமான அளவிற்க்கு கிடைக்கும் வகையில் இயற்கை பரவியிருந்தது. மனம் லேசாகியது வீசிய குளிர்காற்றில். பயணம் தொடர்கிறது குளிர்ந்த காற்றிக்கிடையிலும், அடர்ந்த மரங்களுக்கூடாகவும். பாபநாசம் வந்தது, கூடவே சிறு சலசல சல... என்னும் சத்தமும் வந்தது. பேருந்து நிறுத்தத்தில் இறங்கியவுடன் கண்ணில்பட்ட முதல் காட்சி, ’வற்றாத தாமிரபரணிஆற்றின் சலசலத்த நீரோட்டம்.

18 மே, 2013

கீழவளவு பஞ்ச பாண்டவர் மலை...

இயற்கையை காதலிப்பவர்களுக்கு, இயற்கை தன்னை பல பரிமாணங்களில் காட்சி தரும். அருவியாக, நதியாக, கடலாக, காடுகளாக, மலைகளாக, பனி மலையாக என இயற்கை பல்வேறு பரிமாணங்களைக் கொண்டுள்ளது. இவைகள், பார்பவர்களின் கண்களை கவர்ந்து, மனதை வருடி, கொள்ளை கொண்டு பின்பு மெல்ல நம்மை தனக்கு அடிமையாக்கும். இது காதலின் சக்தி.

அப்படிபட்ட, இயற்கையின் படைப்புகளில் மலைகள் மிகவும் அற்புதமானவைகள். மலைகள் ஒவ்வொன்றும் தனக்கென்ற ஒரு தனி அழகை கொண்டிருக்கும். ஒரு மலையில் ரசித்த அழகு வேறொரு மலையில் வேறொரு தனி அழகைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். மலைகள் ஒவ்வொன்றும் பார்பவர்களின் ரசனைக்கேற்ப காட்சியளிக்கும். மலைகளின் உருவங்கள், வண்ணங்கள், அதன் சிறிதும் பெரிதுமான உயரங்கள் பார்ப்பதற்கு வியப்பாக இருக்கும்.