6 ஜன., 2018

தென்காசி காசி விசுவநாதர் கோவில்சுற்றுலா சென்று சில மாதங்கள் ஆனதும், நகர வெயிலில் தினம் நடைபெறும் காக்க குளியல் மீதான சலிப்பிலும் குற்றாலம் சென்று ஒரு அருவி குளியலை போட்டுவிட்டு வரலாமே! என்ற எண்ணம் சில் மனதில் தோன்றி வந்தது. குற்றாலத்தில் அருவியில் தண்ணி வருது என்ற செய்தி கேட்டதும், சென்ற வாரம் நண்பர்களோடு சேர்ந்து குற்றாலம் சென்று வந்தேன். மார்கழி மாத மிதமான காலைப் பணியில்  மதுரை - செங்கோட்டை பயணிகள் தொடர்வண்டியில் பயணம். பயணத்தில் சென்ற வாரம் பெய்த மழையால் வழியெங்கும் நீர்நிலைகள், பறவைகள், வயல்கள் என எங்கும் பசுமை நிறைந்திருந்தது
.
தென்காசியில் இருந்து குற்றாலம் 5 கி.மீ. அனைவரும் தென்காசி தொடர்வண்டி நிலையத்தில் இறங்கினோம். குற்றாலம் செல்வதற்கு முன் தொன்மையான காசி விசுவநாதர் கோவிலை பார்த்துவிட்டு செல்ல  முடிவு செய்தோம்தொடர்வண்டி நிலையத்தில் இருந்து கோவில் 1கி.மீ தொலைவில் கோவில் அமைந்துள்ளதால் நடந்தே சென்றோம். கோவில் நுழைவாயிலாக ராசகோபுரம் மிக அழகாக காணப்பட்டது.

9 ஜூலை, 2016

உத்தமபாளையம் திருக்குணகிரி சமணப்பள்ளி

உத்தமபாளையம் சமணத்தளத்திற்கு ஒரு நாளாவது சென்று வரவேண்டும் என்ற எண்ணம் பல மாதங்களாக மனதில் இருந்து வந்தது. பயணங்கள் சென்றும் பல மாதங்கள் ஆகிவிட்டதன் காரணமாக ஒரு சின்ன சலிப்பு. அதை ஈடுகட்ட இம்முறை மேற்குதொடர்ச்சி மலைகளை ஒட்டிய சின்னமனூர், உத்தமபாளையம், கூடலூர் பகுதிகளுக்கு நண்பர்களோடு பயணம் சென்று வந்தேன்
உத்தமபாளையத்திலிருந்து கம்பம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ  தொலைவில் அமைந்துள்ளது சமணர்மலை. இம்மலையில்தான் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமணபள்ளி அமைந்துள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் இம்மலையை மொட்டமலை, சமணர்மலை, கருப்பணசாமி மலை என்றே அழைக்கின்றனர். இங்கு செல்வதற்கு கருப்பணசாமி கோவில் எங்கு உள்ளது என்று கேட்டால்தான் எளிதாக வழி சொல்கின்றனர் இங்கு வசிக்கும்  மக்கள்.

5 ஏப்., 2016

தேவன்குறிச்சியில் பாண்டியர் காலக் கல்வெட்டுகள்

திருமங்கலத்திற்கு அருகிலுள்ள தே.கல்லுப்பட்டி – பேரையூர் சாலையில் உள்ளது தேவன்குறிச்சி சிற்றூர். இங்குள்ள மலைக்கு அருகில் உள்ள அக்னீஸ்வரர் - கோமதியம்மன் கோவிலில் கி.பி 12ம் நூற்றாண்டைச் சார்ந்த தமிழ்க் கல்வெட்டுகள் சில உள்ளன. இதில் இக்கோவிலுக்கு மானியங்கள் வழங்கப்பட்டதை விவரிக்கும் கல்வெட்டுகள் சில கோவிலின் கருவறைச் தென்புறச் சுவரிலும், கோவிலைச் சுற்றியுள்ள கோட்டைச் சுவர்களிலும் காணப்படுகின்றன. அவைகள் பாண்டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1216-1238 ) காலத்தை சேர்ந்தவை.

6000 ஆண்டுகள் பழமையான தேவன்குறிச்சி

தேவன்குறிச்சி என்னும் சிற்றூர் திருமங்கலத்திலிருந்து சுமார் 23 கி.மீ தொலைவில் T.கல்லுப்பட்டி - பேரையூர் சாலையில் அமைந்துள்ளது. கல்லுப்பட்டியிலிருந்து 3 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது தேவன்குறிச்சி. T.கல்லுப்பட்டி என்ற ஊர் பெயரில் முன்னதாக வரும் T. (தே) என்ற எழுத்து தேவன்குறிச்சியைக் குறிக்கும் (T Stands for Thevankuruchi. Kalluppadti). தேவன்குறிச்சி பற்றிய வரலாற்றுச் செய்திகளை இணையதளம் மூலமாக  படித்து அறிந்துக்கொண்ட பின் அங்கு செல்ல வேண்டும் என்ற எண்ணம்  அதிகமானது. 
நண்பர்களுடன் தேவன்குறிச்சிக்கு சென்ற வாரம் சென்று வந்தேன். காலை வேளையில் சென்றால் வெயிலின் தாக்கம் சற்று குறைவாக இருக்கும் என்பதால் 6 மணியளவில் இருசக்கர வாகனங்களில் புறப்பட்டோம். கடந்த இரண்டு வாரங்களாக நல்ல மழை. வழியெங்கும் குளுமையும் பசுமையும் நிறைந்திருந்தது. சிறு குளங்களிலெல்லாம் நீர் நிறைந்து காணபட்டது. குளங்களில் சாம்பல் நாரை, நத்தைகொத்தி, வெண் கொக்கு, மீன்கொத்தி, பனங்காடை, கரிச்சான்குருவி என பறவைகள் நிறைந்திருந்தன.