29 ஜூன், 2013

கருங்காலக்குடியும் கற்கால ஓவியங்களும்...

குகைத் தளத்தின் வலது புறமாக குகைக்கு மேலே உள்ள மலைக்குச் செல்ல படிகள் தொல்லியல் துறையினரால் வெட்டப்பட்டுள்ளது. குகைத்தளத்திற்கு மேலேயும் பல உருளை வடிவ பாறைகள் நின்று கொண்டிருந்தன. இங்கும் சில கற்படுகைகளும், கி.பி 10 ம் நூற்றாண்டைச் சேர்ந்த நான்கு வரிகள் கொண்ட வட்டெழுத்து கல்வெட்டு ஒன்றும் வெட்டப்பட்டுள்ளது.

” பள்ளி தரையன்........... “

கருங்காலக்குடியும் கல்வெட்டுகளும்...

கதிரவனே துயில் கலையாத காலை பொழுது. பேருந்தில் பயணம். பேருந்தின் அனைத்து சன்னல்களும் அடைத்தே காணப்பட்டது. மதுரை மாட்டுதாவணிக்கு பயணசீட்டை எடுத்துக் கொண்டு முன் இருக்கையில் அமர்ந்தேன். வெளியே சாலையோர தேநீர் கடைகளில் பக்தி பாடல்கள் ஒலித்துக் கொண்டிருக்கையில் மெல்ல நகர்ந்தது பேருந்து. மதுரைக்கான சுற்றுசாலை வழியாக பயணம் தொடர்ந்தது. பயணங்களில் அதிகாலை பயணத்தில் மட்டும்தான் அமைதியைக் காணமுடிகிறது. மாட்டுத்தாவணியை நெருங்கிக் கொண்டிருக்கையில் கதிரவனின் துயில் மெல்ல கலைந்தது. மேகங்கள் சூழ்ந்த வானம் அழகாக காட்சி தந்தது. சில நிமிடங்களில் பேருந்து நிலையம் வந்தது. பேருந்து நிலையத்தின் எதிரேயுள்ள இடத்திலிருந்து தான் இன்றைய பசுமை நடை பயணம் ஆரம்பம்.

16 ஜூன், 2013

திண்டுக்கல் சிற்பக் கோட்டை...

மதுரையிலிருந்து திண்டுக்கல் வழியாக சேலம் பயணம் செய்யும் போதெல்லாம், எப்படியாது ஒரு முறையாவது திண்டுக்கல் மற்றும் நாமக்கல் மலைக்கோட்டைகளை பார்த்துவிட வேண்டும் என ஆவல் இருந்துகொண்டே இருக்கும். ஆனால், அதற்கான வாய்ப்பு கிடைக்காமலேயே இருந்தது. இப்படித்தான், நமக்கு அருகில் இருக்கும் பல முக்கிய இடங்களை பார்க்காமலேயே சென்று விடுகிறோம். கடந்த வாரம் நண்பர் ஒருவரின் திருமணம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி திருமணத்தில் கலந்து கொண்டு மதிய உணவை முடித்தவுடன் நண்பர்களோடு சென்று மலைக்கோட்டையை பார்த்து வந்தேன்.

மலைக்கோட்டையை பார்த்த பிறகு, மதுரைக்கு அருகில் இருக்கும் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை இத்தனை நாள் பார்க்காமல் இருந்து இருக்கிறோமே என்ற உணர்வுதான் ஏற்பட்டது. பள்ளி, கல்லூரி இதர விடுமுறை நாள்களில் பல தொலைதூர சுற்றுலாத் தளங்களுக்கு செல்லும் நாம்... நமக்கு அருகில் இருக்கும் முக்கிய இடங்களை காணாமல் இருப்பது தான், அருகிலேயே உள்ள ஊர்களின் மேல் நாம் கொண்டுள்ள பற்று.