26 ஜன., 2012

யானைமலையும் லாடன் குடைவரையும்...

மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் அமைந்துள்ளது யானைமலை. சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், காரைக்குடி என மதுரையின் வடக்கு பகுதியில் இருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பொழுது யானைமலையை பார்த்திருப்பீர்கள். ஒத்தக்கடை சிற்றூரானது இம்மலையின் இடப்புறமான தெற்கு திசையில் உள்ளது. மதுரையின் புகழ்மிக்க சான்றுகளில் யானைமலையும் ஒன்று. இம்மலையின் மேற்கு திசையில் அமைந்துள்ளது லாடன் குடைவரை கோவில். சென்ற வாரம் இக்குடைவரையை பார்ககச் சென்று வந்தேன். 

லாடன் குடைவரை முற்பாண்டியர் கால கலைப்பாணியில் மலையைக் குடைந்து அமைக்கப்பட்டிருந்தது. திறந்தவெளியில் ஒரு கோவில் எப்படி இருக்குமோ அதேபோன்று கருவறை, சன்னிதானம் போன்றவை மலையை குடைந்து வெட்டி செய்துள்ளனர். பார்பதற்கே அதியசமாக உள்ளது. இக்குடவரையை செய்து முடிக்க எத்தனை நாட்களானதோ. உள்ளே உள்ள ஒரு சிறிய கருவறையில் முருகன், தெய்வானையுடன் அமர்ந்திருக்கிறார். கண்ணிமாலையும், சன்னவீரமும் இங்குள்ள சிற்பத்தை முருகன் என அடையாளம் காட்டுகின்றன. முன்மண்டபத்திலுள்ள சேவலும், மயிலும் காட்சி தருவது கருவறையிலிருக்கும் சிலை முருகனே என்று ஆதாரமளிக்கிறது.

யானைமலையும் சமணத் தீர்த்தங்கரர்களும்...

காரைக்குடியில் கல்லூரி படிப்பிற்காக சென்றுவரும் பொது எல்லாம் குன்றக்குடி மலை, கீழவளவு மலைகள் அனைத்தும் சில நொடிகளில் பார்வையயைவிட்டு கடந்துவிடும். ஆனால், மேலூர் - வெள்ளரிப்பட்டி அருகே உள்ள மலையும், யானைமலையும் அவ்வளவு எளிதில் கண்களில் இருந்து மறைந்துவிடாது. ஏனென்றால் அவைகளின் நீளமும் சுமார் 4 கி.மீ. ஒத்தக்கடையில் அமைந்துள்ள வேளாண்மை கல்லூரி முழுப்பரப்பளவும் யானைமலையில் கீழ் அடங்கிவிடும். சென்ற வாரம் நண்பர்களோடு சென்று யானைமலையில் அமைந்துள்ள தொல்லியல் தகவலைகளை அறிந்துவந்தேன்.

மதுரையிலிருந்து சுமார் 8 கி.மீ தொலைவில், மேலூர் செல்லும் சாலையில் ஒத்தக்கடை என்னும் இடத்தில் யானைமலை அமைந்துள்ளது. சென்னை, திருச்சி, இராமேஸ்வரம், காரைக்குடி என மதுரையின் வடக்கு பகுதியில் இருந்து மதுரை மாநகருக்குள் நுழையும் பொழுது யானைமலையை பார்த்திருப்பீர்கள். ஒத்தக்கடை சிற்றூரானது இம்மலையின் இடப்புறமான தெற்கு திசையில் உள்ளது. மதுரையின் புகழ்மிக்க சான்றுகளில் யானைமலையும் ஒன்று.

5 ஜன., 2012

சுவாசிப்போம் அழகிய தமிழை...

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த தமிழ் குடி  என்ற பெருமையைக் கொண்ட பெரும் இனத்தவர்கள் தமிழர்கள். உலகில் முதலில் தோன்றியது கல்தான். அப்படி தோன்றிய கல்லானது, காற்றிலும் மழையிலும் கரைந்து மண்ணானது. அப்படி ஆகும் காலத்திலே, மண் உருவாவதற்கு முன்னரே, வாளோடு வீரத்துடன் தோன்றிய இனம் தமிழ் இனம் என்பது ஒட்டக்கூத்தரின் விளக்கம். இத்தகைய தமிழ் குடியின் மரபு வழியாக வந்த தமிழை தாய்மொழியாகக் கொண்டு பேசுபவர்கள் நாம். தமிழ் மொழியின் வரலாறே அதற்கு சான்றாக உள்ளது.
கொடிய ஆழிப்பேரலைகளால் உலக வரைபடத்திலிருந்து மூழ்கடிந்த தமிழகத்தின் தென் பகுதியானகுமரிக் கண்டம் (லெமூரியாகண்டம்)’ தமிழர்கள் வாழ்ந்த பகுதி என்று தொல்லியல் துறையின் மூத்த ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர். சங்ககால தமிழ் இலக்கியங்கள் இவற்றுக்கு சான்றாக உள்ளது. தமிழ்நாட்டில் பிறந்த அனைவரும் ஏதேனும் ஒரு தருணத்தில் எந்த வழியிலாவது குமரிக்கண்டம் என்ற வார்த்தையினை கேளாது இருந்து இருக்க முடியாது.