2 மே, 2015

வரலாறு கூறும் தாண்டிக்குடி கற்பதுக்கை...

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே உலகெங்கிலும் இறந்தவர்களின் நினைவாக பல நினைவுச் சின்னங்கள் எழுப்பும் வழக்கம் இருந்துவந்துள்ளது. ஒவ்வொரு வடிவத்திற்கும் ஒவ்வொரு பெயர்கள். கற்பதுக்கைகள், கற்திட்டைகள், நடுகற்கள், என பல்வேறு வடிவங்களையும், பெயர்களையும் கொண்டுள்ளன.
அவற்றில் கற்பதுக்கை (CIST BURIAL) என்பது பெருங்கற்காலத்தில் இறந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவுச்சின்ன வகைகளுள் ஒன்று. இது இறந்தவர்களின் உடலை அடக்கம் செய்வதற்காக அல்லது அவர்கள் பயன்படுத்திய பொருட்களை வைக்க நிலத்திற்கு கிழே கல்லால் அமைக்கப்பட்ட சிறிய அறை போன்ற அமைப்பு. கற்பதுக்கைகள் பலகை போன்ற வடிவம் கொண்ட கற்களால் ஆனவைகள்.

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 2

5 மணிக்கு தாண்டிக்குடி தமிழ்நாடு காப்பி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சொந்தமான காப்பி தோட்டம் அமைந்துள்ள காடுக்களுக்குள்ளே உள்ளகற்பதுக்கைஒன்றைக் காண பசுமைநடைக் குழுவினர் அனைவரும் சுமார்கி.மீ காட்டிற்குள் நடை பயணமாகச் சென்றோம். வழியெங்கும் உயர்ந்த மரங்களின் கீழே காப்பிச் செடிகள் வளர்ந்திருந்தன. கற்ப்பதுக்கை அமைந்துள்ள இடம் முழுவதும் காட்டுச் செடிகள் வளர்ந்து இருந்தது. கற்ப்பதுக்கையின் வரலாற்றுச் சிறப்பை தாண்டிக்குடியைச் சார்ந்த விவசாயி மோகனசுந்தரம் பசுமைநடைக் குழுவினரிடம் விரிவாக எடுத்துரைத்தார்.

தாண்டிக்குடி மலைப் பயணம் - பகுதி 1

மலைகளுக்கும் எனக்குமான நெருக்கத்தில் மலைப் பயணங்கள் ஒவ்வொன்றும் ஒருபுதுவிதபுத்துணர்ச்சியையும், அனுபவங்களையும் தந்து கொண்டிருருகின்றன. இயற்கையின் படைப்புகளில் ஒன்றான மலைகளின் அழகை வெறும் வார்த்தைகளால் மட்டுமே வர்ணித்துவிட இயலாது. அதனை உள்ளார்ந்து ரசிப்பதே உன்னதம்.
இந்த ஆண்டுக்கான கோடைக்கால விடுமுறைப் பயணமாக திண்டுக்கல் மாவட்டதில் உள்ள தாண்டிக்குடி மலைப் பகுதிக்கு இரண்டாவது முறையாக எங்களது பசுமைநடைக் குழுவோடு இரண்டு நாள் (ஏப்ரல் 25 & 26) பயணமாக சென்று வந்தேன். பண்ணைக்காடு, தாண்டிக்குடி, மற்றும் கொடைக்காணல் பகுதிகளில் மட்டும் ஏறத்தாள 5000 கற்ப்பதுக்கைகள், கற்த்திட்டைகள் இருப்பதாக அப்பகுதி விவசாய பெருமக்கள் கூறுகின்றனர்.