27 ஜூலை, 2014

மாளிகைமேடு எனும் சோழர்களின் மாளிகை...!

உலக அதிசயங்களில் ஒன்றாக போற்றப்பட வேண்டிய சோழர்களின் கட்டிட கலைக்கு எடுத்துக்காட்டானது தஞ்சை பெரிய கோவில் (பெருவுடையார் கோவில்). கோவிலின் அமைப்பும் அழகும் மலைக்க வைக்கும் வியப்பை அளித்தது. அப்போதே அவரது மகன் ராஜேந்திர சோழன் கட்டிய சோழிஸ்வரர் கோவிலையும் பார்த்துவிட வேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சமீபத்தில் கிடைத்த வாய்ப்பில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் சென்று வந்தேன்இராஜேந்திர சோழன் கட்டிய சோழீஸ்வரர் கோவிலின் அழகை பார்த்து முடிப்பதற்கே பல மணி நேரம் எடுத்தது. சோழிஸ்வரர் கோவிலின் அழகை மனது நிறையும் அளவு கண்டு ரசித்தேன்பின் அங்கிருந்தவர்களிடம் அருகில் சுற்றிப்பார்பதற்கு வேறேதும் இடங்கள் இருக்கின்றதா என்று கேட்ட பொழுது மாமன்னன் இராஜேந்திர சோழனது மாளிகைப் பகுதி ஒன்று உள்ளது என்றனர். அந்த மாளிகைப் பகுதியை தேடிச் சென்றேன்.

6 ஜூலை, 2014

‘குடிசெட்லு’ நடுகற்கல்...

குடிசெட்லு’ ஓசூர்பாகலூருக்கு அருகே அமைந்துள்ள சிற்றூர். இவ்வூர் தமிழ்நாடு, கர்நாடகம் மற்றும் ஆந்திரம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் எல்லையில் அமைந்துள்ளது. தெலுங்கில்குடிஎன்றால் கோவில். ‘செட்லு’ என்றால் மரங்கள். இங்கு வாழ்ந்த மூதாதையர்கள் மரங்கள் அடர்ந்த இப்பகுதியில் உள்ள நடுகற்களை வணங்கி வந்திருக்கும் காரணத்தால் இவ்விடம்குடிசெட்லுஎன்ற காரணப்பெயரோடு அழைக்கப்பட்டிருக்கலாம்.

கடந்த ஜூன் மாதம் ஓசூரில் இரண்டு நாள் நடைபெற்றநடுகற்கள்’ (ஹீரோ ஸ்டோன்ஸ்) பற்றிய தேசிய கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கருத்தரங்கில் கலந்துகொள்ள தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா என பல மாநிலங்களிலிருந்தும் தொல்லியல் அறிஞர்கள், ஆராய்சியாளர்கள் வந்திருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களின் நடுகற்கள் மற்றும் கற்திட்டைகள் பற்றிய தொல்லியல் கண்டுபிடிப்பு, அகழ்வராய்வுச் செய்திகள், புகைப்படங்கள் மற்றும் ஆராய்ச்சிக் கட்டுரைகளை கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர்.

1 ஜூன், 2014

சுற்றுப்புறச்சூழல் பாதுக்காப்பு நம் கைகளில்...

ஜூன் 5 உலக சுற்றுச்சூழல் தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இன்றைய சமூகத்தில் சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு என்பது மிக முக்கியமான அவசியமான ஒன்று. ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வே நம்மில் பலரிடம் இல்லை. இன்னும் பலருக்கும் இன்றுதான் (ஜூன் 5) உலக சுற்றுச்சூழல் தினம் என்பதே தெரியாது. சுற்றுபுறச்சூழலை ஏன் பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவதில்லை. மேலும் நம்மைச் சுற்றிலும் சுற்றுச்சூழல் இவ்வாறுதான் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதும் தெரிவதில்லை. இதன் விளைவு... சுற்றுச்சூழலை பற்றிய அவசியத்தை அனைவரும் அறிந்துகொள்ளஐக்கிய நாடுகள் அமைப்புஆண்டுதோறும் ஜூன் 5 ஆம் தேதியை ஒரு முக்கிய சூழல் தொடர்பான நிகழ்வாக கடைபிடித்து வருகிறது.

31 மே, 2014

கற்காலத்து கல்லறைகள் ...

மனிதன் தான் வாழும் காலத்தில் காணமுடியாத இரு இடங்கள் இப்புவியில் உள்ளது. ஒன்று தான் கருவாக முதலில் உருவாகி உயிர்வாழ்ந்த தாயின் கருவறை. மற்றொன்று தான் இறந்த பிறகு, தனக்காக உருவாக்கப்படும் கல்லறை. இந்த இரு இடங்களும் நம் வாழ்வின் மிக முக்கியமான இடங்கள். தாயின் கருவறை வரலாற்றை உருவாக்கும் ஒருவரைச் சுமக்கும் இடமாக இருந்தால், கல்லறை வாழ்ந்த ஒருவரின் வரலாற்று நினைவுகளைச் சுமந்து கொண்டிருக்கும் இடமாக இருக்கிறது. வரலாற்றில் மன்னர்கள், படைத்தளபதிகள், இனக்குழுத் தலைவர்கள், ஆன்மீகவாதிகள், போன்றோர்களுக்கு மட்டுமே கல்லறைகள் அமைக்கப்பட்டு வந்துள்ளது.

26 ஏப்., 2014

மழை பெய்ய மரங்கள் தேவையா ?...

மழை பெய்ய மரங்கள் தேவையா ? என்ற கேள்வி தான் மனதில் எழும்பியது, .செந்தமிழனின் முதல் மழை பெய்த போது பூமியில் மரங்கள் இல்லை என்ற நூலின் தலைப்பைப் பார்த்தவுடன். முதல் பக்கத்திலிருந்து கடைசி பக்கம் வரை வாசித்த பின்பு தான் மழை பெய்ய மரங்கள் தேவை இல்லைமனங்களே’ தேவை என்பதை உணர முடிந்தது.

நமக்கு இருக்கும் ஆற்றலைவிட நமக்கு மேலே மிகப்பெரிய ஆற்றல் உள்ளது என்பது அனைவரது கருத்து. ஆனால், அது இயற்கையின் பேராற்றல். அதற்கு உருவங்களும்வடிவங்களும் இல்லை. ஆனால், அதுவே அனைத்து உருவங்களாகவும், வடிவங்களாகவும் உள்ளது. “

மனதால் இதை புரிந்து கொள்வது மிக எளிது. ஆனால்....!

20 ஏப்., 2014

அழகிய மழைக்கிராமம் பள்ளத்துக்காடு...

நகர வாழ்வின் மின்னல் ஓட்டங்களில் இருந்து ஒரு மாறுதலை மனம் நீண்ட நாளாகத் தேடிக் கொண்டிருந்தது. இதைப்பற்றி நண்பர்களிடத்தில் பகிர்ந்து கொண்டதும் உண்டு. அவர்களுக்குள்ளும் இதே போன்ற ஒரு உணர்வு துள்ளிக்கொண்டே இருந்துள்ளது. தம்பி மதுமலரன் ஒருநாள் தனது ஊருக்கு அருகேயுள்ள மலைக்குச் செல்லலாம் என பரிந்துரைத்தார். நானும் சரி என்று ஒரு ஞாயிறன்று மலைக்குச் செல்லலாம் என்றேன். ஞாயிறு வந்ததும் காலையில் மலைப்பயணம் நகரத்திலிருந்து வெளியேறி மலையை நோக்கி புறப்பட்டது.

நஞ்சில்லா உணவை தரும் உழவர்களைத் தேடி...

அதென்ன ? நஞ்சில்லா உணவு. அப்ப நஞ்சு உள்ள உணவு வேற இருக்கா ? இந்த கேள்விகள் தான் எனக்குள்ளும் எழுந்தது. நஞ்சுள்ள உணவு என்பது வேறேதும் இல்லை, இன்று நாம் அதிகம்பேர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உணவு தான் நஞ்சு உணவு.
அட, நம்மூர்ள தினமும் ஒரு ஏழையோடோ உணவில் கூட பல கூட்டுகள சேர்த்து திங்கிற பாக்கியம் இருக்குனா, கொஞ்சம் வசதியான ஆட்களோட சாப்பாட்டுல எவ்வளவு கூட்டுக இருக்கும். கூட்டுனா என்னாவா?...