9 ஆக., 2013

மரங்களில்தான் விளம்பரம் செய்யணுமா ?...

வெயிலின் கொடுமை சாலையில் செல்லும் பொழுது தெரியும். எங்கயாவது ஒதுங்க நிழல் கிடைக்காத என கண்கள் அலைபாயும். அது மரத்தின் நிழலாக இருந்து விட்டால் இன்னும் மகிழ்ச்சியே. கிடைக்கும் மர நிழலில் ஒதுங்கக்கூட இடம் கிடைக்குமா(?) என்பது வேறு விசயம். அந்த அளவிற்க்கு இன்று சாலையோரம் உள்ள மரங்களின் தேவை அதிகரித்துள்ளது. தினசரிக் கடைகள் எல்லாம் கிடைக்கும் அந்த ஓரிரு மரங்களின் கீழ் இடம் பிடித்துவிடுகின்றன. இல்லையென்றால், இருசக்கர வாகனங்களின் தற்காலிக புகலிடமாக மாறியிருக்கும். எங்கு மரமிருந்தாலும் அங்கு இந்த நிலைதான், இன்று திரும்பிய திசையெல்லாம். அந்த அளவிற்க்கு ‘மரங்களின் நிழல்கள்’ இன்று நமக்குத் தேவைப்படுகின்றன. ஆனால், இந்த மரங்களுக்குப் பாதுகாப்பு மட்டும் தரப்படுவதில்லை. ஏன் இந்த முரண்பட்டச் சூழல் நம்மிடையே நிலவுகிறது?